அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவா் நான்சி பெலோசி ஆசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதில் சீனாவின் எச்சரிக்கையை மீறி நான்சி தைவான் சென்றதால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே முரண்பாடு அதிகரித்துள்ளது. இதையடுத்து நான்சியின் வருகையை எதிர்த்து தைவான் எல்லைப்பகுதி அருகே சீனா தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், சீன எல்லை பகுதிக்கு அருகே அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா வருடாந்திர போர்ப்பயிற்சியில் ஈடுபடவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், உத்தரகாண்ட் மாநில அவுலியில் 10 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து இந்த போர் ஒத்திகை நடக்கவுள்ளது. அமெரிக்காவை எதிர்த்து தைவானில் சீனா போர் பயிற்சி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அமெரிக்காவும் இந்தியாவும் போர் பயிற்சி செய்ய இருக்கின்றனர். முன்னதாக, இந்தியாவின் எல்லைப்பகுதிகளில் சீனாவின் தலையீடு இருப்பதால் அவ்வப்போது பிரச்சினைகள் எழுந்துவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.