15ஆவது ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் நடக்கவுள்ள சூப்பர் 4 சுற்று லீக் போட்டியில் நேற்று இரவு இந்தியாவுடன் இலங்கை அணி மோதியது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி 19.5 ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 174 ரன்கள் எடுத்தது. இதனால், இந்திய அணியை இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று இறுதிச்சுற்றுக்கு சென்றுள்ளது. முன்னதாக, பாகிஸ்தான் அணி தற்போது இலங்கை அணியுடன் தோல்வியை சந்தித்துள்ள இந்திய அணிக்கு இறுதிச்சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு குறைந்து வருகிறது.