இங்கிலாந்து நாட்டின் பெர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வரும் 22ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஏழாவது நாளான இன்று இந்தியா ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி என இரு பதக்கங்களை வென்றுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா பளுதூக்குதல் போட்டியில் 134.5 புள்ளிகளுடன் சுதிர் முதலிடத்தை பெற்று இந்தியாவுக்கு ஆறாவது தங்கத்தை வென்று தந்தார். அவரைத்தொடர்ந்து, நீளம் தாண்டுதல் போட்டியில் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். காமன்வெல்த் போட்டிகளில் நீளம் தாண்டுதல் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். இந்த நிலையில், 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 20 பதக்கங்களுடன் ஏழாவது இடத்தில் உள்ளது.