ராஞ்சி: நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இருஅணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய அணி 3-0 என முழுமையாக வென்றது. இந்நிலையில் இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் மோதுகின்றன. இதன் முதல் ஆட்டம் இன்று இரவு7.30 மணிக்கு ராஞ்சியில் நடைபெறுகிறது.
இன்றைய ஆட்டத்தில், ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. இந்த வகையில் ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா, குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் ஆகியோருடன் தொடக்க வீரர் பிரித்வி ஷா, ராகுல் திரிபாதி, உம்ரன் மாலிக், ஷிவம் மாவி, ஜிதேஷ் சர்மா, முகேஷ் குமார் ஆகியோரும் அணியில் உள்ளனர்.
நியூஸிலாந்து அணியானது மிட்செல் சாண்ட்னர் தலைமையில் களமிறங்குகிறது. ஒருநாள் போட்டித் தொடரை இழந்துள்ள அந்த அணி டி 20 தொடரில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.