உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது முதல் இந்தியா 11 முறை உக்ரைனுக்கு மருந்து உள்ளிட்ட உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளது. இதை ஐநா பாதுகாப்பு அவையில், இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் தெரிவித்ததுடன் உதவி தேவைப்படும் ஆப்கானிஸ்தான், மியான்மர், சூடான், ஏமன் உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்தியா உதவிகளை அனுப்பி வருகிறது என்றார். மேலும், உதவிகள் தேவைப்பட்டாலும் இந்தியா செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யா-உக்ரைன் இடையேயான போருக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவிப்பதைப்போல் இந்தியாவின் கண்டனத்தையும் பதிவு செய்த அவர், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்குத் தீர்வு காண முன்வர வேண்டும் எனவும் எடுத்துரைத்தார். இதற்கிடையில், உக்ரைன் நாட்டின் டினிப்ரோபெற்ரோவ்ஸ்க் நகரில் உள்ள ரயில் நிலையத்தின் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 22 பேர் பலியாகியுள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தெரிவித்துள்ளார்.