உலகின் பல நாடுகளில் 5ஜி தொலைத்தொடர்பு சேவை பயன்பாட்டில் உள்ள நிலையில், 2022ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவிலும் 5ஜி தொலைத்தொடர்பு சேவை நடைமுறைக்கு வரும் என இந்தாண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சர் குழு இந்த திட்டத்துக்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. 5ஜி தொலைத்தொடர்பு சேவை என்பது தற்போது உள்ள 4ஜி சேவையைவிட 10 மடங்கு கூடுதல் வேகம் கொண்டதாக இருக்கக் கூடும் எனக்கூறப்படுகிறது. மொத்தமாக 72 ஜிகா ஹெர்ட்ஸ் அளவிலான அலைக்கற்றைகள், மொத்தம் 20 ஆண்டுகளுக்கு ஏலம் விடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த ஏலம் வரும் ஜூலை இறுதிக்குள் முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.