ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இந்து கோயில் நேற்று திறக்கப்பட்டுள்ளது. ரூ.148 கோடி செலவில் ஜபேல் அலி பகுதியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோயிலை அந்த நாட்டு அரசின் உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டு திறந்து வைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து இன்று முதல் கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. இஸ்லாமிய நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் தினசரி ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.