அமெரிக்காவில் குரங்கு அம்மை நோய்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதுவரை 6 ஆயிரத்து 600 பேருக்கும் மேற்பட்டோருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குரங்கு அம்மை தடுப்பூசி கிடைக்கும் வேகம் தொடர்பாக அதிபர் பைடனின் நிர்வாகம் தொடர்பாக விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலக அளவில் குரங்கு அம்மை வேகமாக பரவி வருகிறது. இதைத்தொடந்து ஃபிரான்சிஸ்கோ, நியூயாா்க், கலிஃபோா்னியா என ஒவ்வொரு மாகாணங்களாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது இந்த முடிவை அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.