இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையை மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்படி, 17 ஆயிரத்து 073 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 07 ஆயிரத்து 046 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், நேற்று ஒரே நாளில் 15 ஆயிரத்து 208 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4 கோடியே 27 லட்சத்து 87 ஆயிரத்து 606 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் 94 ஆயிரத்து 420 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில், நேற்று மட்டும் 1844 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து, நேற்று 21 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 020 ஆக உயர்ந்துள்ளது. அதிகளவில் தொற்று பாதித்த மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலம் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 493 ஆக முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து 3 ஆயிரத்து 378 பேருடன் கேரளா இரண்டாமிடத்திலும், தமிழ்நாட்டில் 1,472 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர பொதுமக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பதுடன் முகக்கவசத்தை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.