இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 16,299 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, இதுவரை மொத்தம் 4,42,06,996 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 53 பேர் சிகிச்சை பலனளில்லாமல் பலியாகியுள்ளனர். இதனால், கொரொனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,26,879ஆக அதிகரித்துள்ளது. மேலும்,கொரோனா பாதிக்கப்பட்டு 4,35,55,041 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில்,1,25,076 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.