சென்னை: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 2023-202ம் கல்வியாண்டில் 1முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை இன்று தொடங்கியது. சென்னை கொளத்தூரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஸ் அளித்த பேட்டியில்:- கடந்த 2 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 11 லட்சமாக உயர்ந்துள்ளது. முதல்வர் அறிவுரையின்படி அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க இன்று இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அரசுப் பள்ளியில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளது. மேலும்,
கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியில் நிற்க வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று சொல்லி இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.