இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,417 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த இதுவரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த பாதிப்பு 4,44,66,862ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 52,336ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 23 போ் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 5,28,030 ஆக உயா்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து இன்று 6,032 போ் குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,38,86,496 பேராக அதிகரித்துள்ளது.