குஜராத் மாநிலம் வடோதரா நகரில் உள்ள பெண்கள் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 24 மணி நேரமும் உதவுவதற்காக வடோதரா காவல்துறையினரால் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தினசரி ரோந்து பணிக்கு மோட்டார் சைக்கிள் அல்லது ஜீப்பில் பயணிப்பதற்கு பதிலாக இ-சைக்கிளைப் பயன்படுத்துகிறது. பெண்கள் பாதுகாப்புக்கு அமைக்கப்பட்ட SHE மகளிர் காவல் படையினர் ரோந்துக்கு செல்லும்போது நெரிசலான இடங்களில் செல்ல வேண்டியுள்ளது. மேலும் வயல் போன்ற இடங்களிலும் ரோந்து செய்ய வேண்டி உள்ளதால் இ-சைக்கிள்கள் மிகவும் உதவியாக இருக்கும் என்ற நோக்கத்தில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பான இந்த திட்டம் வெற்றி பெற்றால், வரும் நாட்களில் இ-சைக்கிள்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் அந்த பகுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.