15ஆவது ஆசியக்கோப்பை 20 ஓவர் டி20 கிரிக்கெட் தொடர் போட்டி ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், துபாயில் நேற்றிரவு நடந்த 4ஆவது லீக் போட்டியில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹாங்காங் கேப்டன் நிசாகத் கான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்ததையடுத்து, முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. இதையொட்டி, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கலம் இறங்கிய ஹாங்காங் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 152 ரன்களை எடுத்து ஆட்டத்தை இழந்தது. இதன்மூலம் சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா தகுதியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.