இந்திய ராணுவத்துக்கு வீரர்களை தேர்வு செய்ய மத்திய அரசு அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. இதனையடுத்து, அக்னிபாத் திட்டத்தின் கீழ் முப்படைகளில் இணைய விரும்புபவர்களிடம் இருந்து ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அக்னிபாத் திட்டத்தின் கீழ் முதல் தொகுப்பில் 20 சதவிகிதம் பெண்கள் இந்திய கடற்படையில் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தேர்வாகும் பெண்களுக்கு நாட்டில் உள்ள பல்வேறு கடற்படை தளங்களுக்கு பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.