சீனாவின் ஹாங்காங்கில் கடந்த 44 ஆண்டுகளாக பெருமைக்குரிய அடையாள சின்னமாக இருந்த ஜம்போ கிங்டம் மிதவை ஹோட்டல், அரண்மனை போன்ற தோற்றத்தில் இருந்த புகழ்பெற்ற மிதவை கப்பல் ஆகும். இது, கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டு செயல்படாமல் இருந்தது. தற்போது, இந்த மிதவை கப்பலை பராமரிக்க அதன் நிறுவனம் எண்ணியது. ஆனால், புதுப்பிக்க செலவு அதிகம் ஆகும் என்பதால், அந்த கப்பல் அண்மையில் பராமரிப்பு குறைவாகும் மற்றொரு இடத்துக்கு துறைமுகத்திலிருந்து இழுவை படகுகள் மூலம் இழுத்துச்சென்றபோது பாரமா பாரசெல் தீவுக்கு அருகே கடலில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபலமான பாரம்பரிய சின்னமாக இருந்த கப்பல் கடலில் மூழ்கியது குறித்து ஹாங்காங் மக்கள் வருத்தத்தில் இருந்தாலும் விபத்தில் உயிர்சேதங்களோ, காயமோ யாருக்கும் ஏற்படவில்லை என்பது ஒருவகையில் நிம்மதிதான்.