இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளி கணக்கில் வென்றது. இதனையடுத்து ஒருநாள் கிரிக்கெட் போட்டி அணிகளுக்கான ஐசிசி தர வரிசைப் பட்டியலில் மூன்றாவது இடத்தை இந்திய அணி பிடித்துள்ளது. முதல் இடத்தில் நியூசிலாந்து அணியும், இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து அணியும் உள்ளது. இங்கிலாந்து அணியுடனான போட்டியில் பெற்ற வெற்றியால் பாகிஸ்தான் அணியை பின்னுக்கு தள்ளி இந்திய அணி புள்ளி பட்டியலில் முன்னேறியுள்ளது.