“தி லெஜண்ட் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு துபாயில் நடந்தது. அதில் பேசிய, லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரும், இந்த திரைப்படத்தின் கதாநாயகனுமான சரவணன், சிறுவயது முதலே நடிக்க ஆசைப்பட்டதாகவும் அதற்கான வாய்ப்பு தற்போதுதான் அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், தி லெஜண்ட் சிறப்பாகவும், பிரமாண்டமாகவும் உருவாகியுள்ளதாக பான் இந்தியா திரைப்படமாக 5 மொழிகளில் வெளியிடப்படுவதாகவும் கூறியுள்ளார். இத்துடன், இந்த திரைப்படம் மக்கள் பார்த்து ரசிக்கும் படமாக மட்டும் இல்லாமல் நல்ல மெசேஜ் சொல்லும் படமாக இருக்கும் என்றார்.