சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் முதன்முதலில் 1955ஆம் ஆண்டு மதிப்பீடு செய்யப்பட்டது. பின்னர், பல காலக்கட்டத்தில் நகைகள் சரிப்பார்க்கப்பட்ட நிலையில், கடைசியாக கடந்த 2005ஆம் ஆண்டு சரிப்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், 17 ஆண்டுகளுக்கு பிறகு, 6 பேர் கொண்ட குழு நேற்று (ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி) நகைகளை சரிப்பார்த்த நிலையில் இன்றும் இந்த பணி தொடர்கிறது.