ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தின் சைஞ் பகுதியில் தனியார் பேருந்து இன்று காலை பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுடன் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக நியோலி-ஷான்சர் சாலையில் சோல்ஜர் பள்ளத்தாக்கில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்பு படையினருடன், அந்த பகுதி பொதுமக்களும் இணைந்து மீட்டு வருகின்றனர். எனினும், சம்பவ இடத்திலேயே பள்ளி மாணவர்கள் உட்பட 12 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. மேலும் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, ஹிமாச்சலப் பிரதேச மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளனர்.