உலகக் கோப்பை ஹாக்கி போட்டி வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை ஒடிசா மாநிலத்தில் நடைபெறவுள்ளது. இதில், மொத்தம் 16 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கும் போட்டியில் ஒவ்வொரு நாடும் எந்தப் பிரிவில் இடம்பெறுகிறது என்பதற்கான முடிவு இன்று எடுக்கப்பட்டது. மொத்தமுள்ள 4 பிரிவுகளில் இந்திய அணி டி பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதில், இந்தியா, வேல்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. நடப்பு சாம்பியனான பெல்ஜியம் பி பிரிவில் ஜெர்மனி, கொரியா, ஜப்பான் ஆகிய அணிகள் உள்ளன.