2022-23 கல்வியாண்டிற்கான B.E., B.Tech / B.Arch பட்டப்படிப்பிற்காக கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெற இருந்த நிலையில் இதுவரை சுமார் 176155 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதில், 25605 விண்ணப்பங்களுக்கு மட்டுமே விண்ணப்ப கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் கீழ் பொதுத்தேர்வெழுதிய பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளிவராத நிலையில் தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்கள், சி.பி.எஸ்.சி தேர்வு முடிவுக்கு காத்திருக்கும் மாணவர்களாக கருதப்படுகின்றனர். எனவே, அவர்களுக்கு அவகாசம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே உயர் கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளபடி, சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் அறிவித்ததில் இருந்து ஐந்து நாட்கள் வரை விண்ணப்பித்தவர்கள் கட்டணத்தை செலுத்தலாம்.