பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூன் மாதம் மத்தியிலிருந்தே பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அந்த நாட்டின் நெடுஞ்சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 320ஆக பதிவாகியுள்ளது. மழை, வெள்ளத்தால் பலூசிஸ்தான் மாகாணம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாகாணத்தில் மட்டும் கனமழை காரணமாக இதுவரை 127 போ் பலியாகியுள்ளனா்.