கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் மற்றும் அதன் துணை வைரஸ்களால் தூண்டப்பட்ட வைரஸ்களால் தற்போது இந்தியாவில் புதிதாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, கர்நாடகம், தமிழகம், அரியானா, உத்தரப்பிரேதசம், தெலுங்கானா, மேற்கு வங்காளம், குஜராத் ஆகிய 10 மாநிலங்களில் தலா ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இதனால், கொரோனா பரவலை தடுக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மருத்துவர்களுடன் இணைந்து இன்று டெல்லியில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளார். இந்த கூட்டத்தில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுப்பதற்கான யுக்திகள் குறித்து ஆலோசனை செய்யப்படவுள்ளது.