கோவை மாவட்டம் பீளமேடு புதூர் பகுதியில், இந்து மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து, இந்து முன்னணி அமைப்பின் சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. அப்போது, பாஜக மாநகர் மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி “ஆ.ராசா தைரியம் இருந்தால் காவல் துறையினர் பாதுகாப்பு இல்லாமல் கோவையில் கால் எடுத்து வைக்கட்டும் பார்க்கிறேன்” என்று பேசியதாக தெரிகிறது. இதையடுத்து, பாலாஜி உத்தம ராமசாமியின் பேச்சுக்கு பல்வேறு திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டதை அறிந்த பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.