அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வசித்து வருபவர் டைலர் கோஹன். இவர் உலகின் பிரபலமான தகவல் தொழில் நுட்ப நிறுவனமான கூகுளில் பணிபுரிய வேண்டும் என்ற விரும்பம் கொண்டு இருந்துள்ளார். இதற்காக ஒரு முறை இரு முறை அல்ல 39 முறை முயற்சித்துள்ளார். எனினும், ஏதாவது ஒரு காரணத்துக்காக அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கைவிடாத முயற்சி காரணமாக தற்போது 40ஆவது முறையாக விண்ணப்பித்தப்போது இவருக்கு கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. நீண்டநாள் கனவாக இருந்து வந்த கூகுள் நிறுவன வேலையை இவரின் விடா முயற்சி பெற்று தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.