பேருந்துகளில் பயணிக்கும் பெண் பயணிகளை நோக்கி ஆண் பயணி, முறைத்துப் பார்த்தல், கூச்சலிடுதல், விசில் அடித்தல், கண் சிமிட்டுதல், பாலியல் ரீதியாக சைகைகள், பாடல் பாடுதல், வார்த்தைகளை உச்சரித்தல் புகைப்படம் எடுத்தல் போன்றவை செய்தால் நடத்துநர்கள் எச்சரிக்கை விடுத்து இறக்கிவிடலாம். மேலும் எச்சரிக்கையை மீறியும் செயல்படும் ஆண்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் என்றும் மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.