டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் கூறி இருப்பது, ஹேக்கர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களின் செல்போனில் உள்ள அனைத்து தகவலையும் எளிமையாக அணுக முடியும் என்றும் செல்போனை கட்டுப்படுத்துவதற்கு ஒரு வீடியோ அனுப்பினால் மட்டும் போதும், அதனை அந்த பயனர் ஓபன் செய்தால் அனைத்து தகவல்களும் ஹேக்கர்களால் திருட முடியும் என்றும் பேசியுள்ளார். மேலும், 13 வருடங்களாக வாட்ஸ்அப் உளவு பார்க்கும் கருவியாக பயன்பட்டு வருகிறது என்று கூறி வாட்ஸ்அப் பயனர்களை எச்சரிக்கை செய்துள்ளார். டெலிகிராம் நிறுவனரின் இந்த கருத்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.