குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் டிஜிபிக்கள் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய சிபிஐ அதிகாரிகள் சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மாநில அரசிடம் அனுமதி பெற்று முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய முடியும் என்பதால் அதன் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் கடிதம் எழுதி இருப்பதாக சிபிஐ சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.