இந்திய தேர்தல் ஆணையம் இன்று தலைநகர் புதுடெல்லியில் இந்தாண்டு இறுதிக்குள் நடத்தப்படவுள்ள குஜராத் மற்றும் இமாசலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை அறிவிக்க இருக்கிறது. இரு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையர் வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. முன்னதாக, இரு மாநிலங்களிலும் கட்சிகள் தங்களின் தேர்தல் பிரச்சாரங்களை தொடங்கிவிட்டன.