குஜராத் மாநிலத்தில் ஏழைக் குடும்பங்களுக்கு வருடத்திற்கு 2 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால், மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் எரிவாயு சிலிண்டர் இணைப்புப் பெற்றுள்ள 38 லட்சம் குடும்பங்கள் பயன்பெறுவார்கள். அதேபோன்று வீடுகளுக்கு குழாய்மூலம் எரிவாயு இணைப்புப் பெற்றவர்கள் பயனடையும் வகையில் சிஎன்ஜி, பிஎன்ஜி மீதான வாட்வரி 10 சதவீதம் குறைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.