இந்தியா முழுவதும் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நீத்தார் நினைவு நாள் என்றும் காவலர் நினைவு தினம் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த ஒரு வருடத்தில் தமிழகத்தை சேர்ந்த மூன்று காவலர்கள் உட்பட நாடு முழுவதும் உயிர்நீர்த்த 264 காவல்துறை வீரர்கள் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி இன்று சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு (DGP) தலைமையில், காவல் உயரதிகாரிகள், டிஜிபிக்கள், துணை ஆணையர்கள் இணை ஆணையர்கள் முப்படைகளைச் சேர்ந்த அதிகாரிகள், பணியின்போது உயிரிழந்த
காவலர்களின் நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர்.