ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவண் ஏவுதளத்தில் இருந்து இன்று நள்ளிரவு 12.07 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. எம்-3 ராக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ளது. இதற்கான கவுண்டன் நேற்று நள்ளிரவு 12.07 மணிக்கு தொடங்கியது. வணிகப்பயன்பாட்டுக்காக இந்த ராக்கெட் செயல்படுத்தப்படவுள்ளதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.எல்.வி. எம்-3 ராக்கெட் 43.5 மீட்டர் உயரமும், 640 டன் எடையும் கொண்டது.