குடியரசுத் தலைவர் தேர்தலில் மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தியை பொதுவேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்ததாக செய்திகள் வெளியாயின. இந்த நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட கோபாலகிருஷ்ண காந்தி மறுப்பு தெரிவித்துள்ளார். தன்னை விட சிறப்பு வாய்ந்த ஒருவரை வேட்பாளராக தேர்வு செய்யும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார். முன்னதாக முதலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் மற்றும் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்திருந்தது. எனினும் இவர்கள் இருவரும் இந்த வாய்ப்பு மறுத்தன் காரணமாக 3ஆவது நபரான கோபாலகிருஷ்ண காந்தியும் மறுத்துள்ளதால் அடுத்த வேட்பாளரை தேடும் பணியில் எதிர்க்கட்சிகள் இறங்கியுள்ளன.