சென்னை தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு 383வது பிறந்ததினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் நாளை மாலை முதல் ஞாயிறு நள்ளிரவு வரை பிரம்மாண்டமான முறையில் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை தின விழாவில் தமிழகத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், உணவுத்திருவிழா, சென்னை தொன்மை குறித்த புகைப்பட கண்காட்சிகள், கைவினை பொருட்களின் கண்காட்சி, தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகள், குழந்தைகளுக்கான விளையாட்டுகள் போன்றவை இடம்பெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் சென்னை மாநகராட்சி சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் வண்ணமயமான மின்விளக்குகளை அமைக்கப்படவுள்ளது. இதேபோல் சென்னை தினத்தை முன்னிட்டு இணையதளம் வாயிலாக சென்னையின் பெருமையை பறைசாற்றும் ஓவியம், புகைப்படம், குறும்படம், Social media Reels உள்ளிட்ட போட்டிகளை நடத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. போட்டியில் கலந்துகொள்பவர்கள் 21ஆம் தேதிக்குள் கலந்துகொள்ள சென்னை மாநகராட்சி இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.