சென்னை அண்ணா சாலையில் உள்ள ஈ.வெ.ரா. பெரியாரின் சிலைக்கு அவரின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற எம்.பி.க்கள் எம்.எல்.ஏக்கள் மற்றும் கூட்டணிக்கட்சி தலைவர்கள் பலரும் கலந்துகொண்டு பெரியாருக்கு மரியாதை செலுத்தினர். அதேபோல், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுடன் பெரியாரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக இன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.