தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை உட்பட பல்வேறு மத்திய அமைச்சர்களை அலுவலக ரீதியாக அவர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாதந்தோரும் மாநில நிலவரம் குறித்து மத்திய உள்துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்க ஆளுநர் டெல்லி செல்வது குறிப்பிடத்தக்கது.