சென்னையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், ”அரசியல் என்பது ஒரு வாழ்வியல், அனைத்து இடங்களிலும் அரசியல் பேச வேண்டும் என எப்பொழுது சொல்கிறார்கள் அப்பொழுதுதான் நாடு உறுப்படும். ஆளுநரை சந்தித்து அரசியல் பேசுவதில் தவறில்லை யார் வேண்டுமானாலும் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசலாம் என கூறினார். அரசியல் பேசாதவன் மனிதராக இருக்க முடியாது என்கிறார் காந்தி, மனிதனின் உரிமைக்காக பேசும் அனைத்தும் அரசியல்தான். அந்த உரிமை ரஜினிகாந்திற்கு இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் ஆளுநரை நியமித்துள்ளார்கள். பிறகு ஏன் ஆளுநர் அரசியல் பேசக்கூடாதா? ஆளுநர் ஆர்.ரவியை நியமித்தது யார் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் தானே?. அப்பொழுது அது சார்ந்த நிகழ்வுகளும் அதை சார்ந்த தலைவர்களையும் தானே அவர் சந்திப்பார். ஆளுநருடன் அரசியல் பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை” என்று அவர் கருத்து கூறியுள்ளார்.