இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான அரசுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி மாதக்கணக்கில் போராட்டங்களில் ஈடுபட்டு முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை ஜூலை 13-ஆம் தேதி நாட்டைவிட்டு ஓட்டம் பிடிக்க வைத்தனர். இலங்கையில் இருந்து தப்பியோடிய கோத்தபய முதலில் மாலத்தீவில் அடைக்கலம் அடைந்தார். ஆனால், அங்கும் அவருக்கு பொதுமக்கள் எதிர்ப்பு வலுத்ததால் மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் சென்றார். பின்னர், சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்தில் தஞ்சம் அடைந்திருந்த கோத்தபய நேற்று நள்ளிரவு இலங்கையில் உள்ள கொழும்பு விமான நிலையத்துக்கு சென்றடைந்தார்.