முன்னணி தேடுதல் தளமான கூகுள் உலகம் முழுவதும் போற்றுதலுக்குறிய நாளாக கருத்தப்படும் தினங்களுக்கு தனது தேடுதல் பொறியில் சிறப்பு டூடுல்களை அமைக்கும். அதன்படி, இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி, சிறப்பு டூடுலை இன்று அமைத்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஓவிய கலைஞர் நீதி வடிவமைத்துள்ள இந்த டூடுல் வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய கலாச்சாரத்தை முன்னிறுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதில், இந்தியாவில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த குடிமக்கள் இருபாலரும் இணைந்து பட்டம் விடுவது போல அமைந்துள்ளது. சுதந்திர போராட்டத்தின்போது பட்டங்களில் ஆங்கிலேயருக்கு எதிரான முழக்கங்களை எழுதி, காற்றில் பறக்கவிட்டுள்ளனர் என்பதை குறிப்பிடும் விதமாகவும், இந்திய கடந்த 75 ஆண்டுகளில் அடைந்துள்ள வளர்ச்சியை பறைசாற்றும் படியும் இந்த ஓவியம் அமைக்கப்பட்டுள்ளதாக ஓவியர் நீதி கூறியுள்ளார்.