சீனா நாட்டில் 2017ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் தனது மொழிபெயர்ப்பு சேவையை தொடங்கியது. இந்த நிலையில், உலகம் முழுவதும் அவ்வப்போது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தும் கூகுளை விட சீன தொழில்நுட்ப வல்லுநர்கள் சிறந்த சேவையை அளித்து வருவதாகவும், சீன மொழியை மொழிபெயர்ப்பதில் கூகுளை விடவும் உள்நாட்டு செயலிகள் நன்கு வேலை செய்வதாலும் கூகுள் சீனாவில் பொலிவை இழக்கத்தொடங்கியுள்ளது. இதனால், தற்போது தனது மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.