நடிகர் ஜீவா மற்றும் மிர்ச்சி சிவா இணைந்து நடித்து சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு-2 திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதற்கு பிறகு தற்போது ஜீவா மற்றும் மிர்ச்சி சிவா காம்போவில் அடுத்த திரைப்படம் வெளியாக தயாராகி வருகிறது. பொன்குமார் இயக்கி நகைச்சுவை பின்னணியில் உருவாகும் கோல்மால் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. அதன் தொடக்கப்பணியாக கோல்மால் பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஜீவா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வெளியிட்டுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில், யோகி பாபு, தன்யா ஹோப் உடன் வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் புகழ் மாளவிகாவும் நடித்துள்ளார். கோல்மால் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதே டைட்டிலில் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் திரைப்ப்டங்கள் வெளியாகி இருக்கும் நிலையில், அந்த திரைப்படங்களில் இருந்து இந்த கோல்மால் எப்படி தனித்து இருக்கப்போகிறது என்று திரைத்துறையினருடன் ஜீவா மற்றும் மிர்ச்சி சிவா காம்போ ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.