சென்னையில் இன்று (ஜூலை மாதம் 25ஆம் தேதி) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.37,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.24 உயர்ந்து ரூ.4720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் 10 பைசா குறைந்து ரூ.61.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.100 குறைந்து ரூ.61,100 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.