day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

தமிழக காவல்துறையில் பெண் போலீஸாருக்கான பொன் விழா கொண்டாட்டம் : முதல்-அமைச்சர் பங்கேற்பு

தமிழக காவல்துறையில் பெண் போலீஸாருக்கான பொன் விழா கொண்டாட்டம் : முதல்-அமைச்சர் பங்கேற்பு

சென்னை: தமிழக காவல் துறையில் இந்த ஆண்டு மாபெரும் முத்திரை பதிக்கும் பெண் போலீசின் பொன் விழா ஆண்டு . 1973-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதிதான் தமிழக காவல் துறையில் பெண் போலீசின் முதல் காலடிச்சுவடை பதிக்க வைத்தார். அவர் தொடங்கி வைத்த பெண் போலீஸ் 50 ஆண்டுகளை தொட்டு இன்று ஆண் போலீசுக்கு இணையாக, பெரிய ஆலமரமாக வளர்ந்து நிமிர்ந்து கம்பீரமாக நிற்கிறார்கள். 22 பேருடன் தொடங்கப்பட்ட பெண் போலீஸ், தற்போது 35 ஆயிரத்து 329 பேருடன் தலை நிமிர்ந்து நிற்கிறது. 1 டி.ஜி.பி., 2 கூடுதல் டி.ஜி.பி.க்கள், 14 ஐ.ஜி.க்கள் இந்த பெண் போலீசில் அணிவகுத்து நிற்கிறார்கள்.

முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியாக திலகவதி – லத்திகாசரண் 1976-ல் தமிழகத்தின் திலகவதி தேர்வு பெற்று சாதனை படைத்தார். தமிழகத்தின் முதல் பெண் டி.ஜி.பி. என்ற பெருமை பெற்றவர் லத்திகாசரண். சென்னையின் முதல் பெண் கமிஷனரும் இவர்தான்.

முதல்-அமைச்சராக தந்தை கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட பெண் போலீசின் பொன் விழாவுக்கு தலைமை தாங்கி நடத்தும் பணியை அவரது மகன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) பெற்றுள்ளார். இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இந்த பிரமாண்ட விழா நடைபெறுகிறது. பெண் போலீசின் பொன் விழா முழுக்க, முழுக்க பெண் போலீசாரால்தான் நடத்தப்படுகிறது. குதிரைப்படை வீராங்கனைகள்தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை விழா நடக்கும் அரங்கத்துக்கு வரவேற்று அழைத்து வருகிறார்கள். மோட்டார் சைக்கிள் வீராங்கனைகளும் அணிவகுத்து வருவார்கள். அணிவகுப்பு மரியாதையும் பெண் போலீசாரால்தான் நடத்தப்படுகிறது. சைக்கிள் பேரணி விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண் போலீசின் சைக்கிள் பேரணியை தொடங்கி வைக்கிறார்.

‘தூணாக நின்று பெருமை சேர்க்கும் பெண் போலீஸ்’ பொன் விழா கொண்டாடும் பெண் போலீசாரின் பெருமைகள் குறித்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- தமிழக போலீஸ் துறையில் பெண் போலீசாரின் பங்களிப்பு முக்கியமானதாகவும், பெருமை சேர்ப்பதாகவும் உள்ளது. ஆரம்ப காலத்தில் பெண் குற்றவாளிகளை விசாரித்து கைது செய்வது, பொதுக்கூட்டங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது போன்ற ஒரு சில பணிகளில்தான் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது சட்டம் – ஒழுங்கை பராமரிப்பது, புலன் விசாரணை செய்வது போன்ற பணிகளில் பெண் போலீசார் ஈடுபடுத்தப்படவில்லை. தமிழகத்தில் உள்ள 1,498 போலீஸ் நிலையங்களில் 503 போலீஸ் நிலையங்களுக்கு சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு பெண் இன்ஸ்பெக்டர்கள் தான் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதில் அவர்களது பணி சிறப்பாக உள்ளது. தமிழகத்தில் 228 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் உள்ளன. அந்த போலீஸ் நிலையங்கள் மூலம் கடந்த ஆண்டு 75 ஆயிரத்து 600 பெண்களிடம் புகார் மனுக்கள் பெறப்பட்டு உரிய தீர்வு காணப்பட்டு உள்ளது. எப்.ஐ.ஆர். போன்ற முக்கிய பணிகளை கம்ப்யூட்டரில் அவர்கள்தான் பதிவு செய்கிறார்கள். ஆக, சட்டம்-ஒழுங்கு பிரிவில் இருந்து முக்கியமான நிர்வாக பணிகளிலும் பெண் போலீசாரின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!