சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை சரிந்து வந்தது. இந்நிலையில் கடந்த இரு நாட்களாக தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது. நேற்று தங்கத்தின் விலை பவுன் ரூ.440 உயர்ந்து ரூ.37 ஆயிரத்து 440-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.37,576க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. வெள்ளி கிராம் ரூ.61.50ஆகவும், கிலோ ரூ.61 ஆயிரத்து 500 ஆகவும் விற்கப்படுகிறது. பண்டிகை காலங்கள் நெருங்கி வரும் வேளையில் தமிழகத்தில் தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது.