சென்னையில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை சரிந்து வந்த நிலையில், நேற்று ரூ.120 உயர்ந்தது. இந்த நிலையில், மீண்டும்இன்று வியாழக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ. 55 உயர்ந்து ரூ.4,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.37,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.50 அதிகரித்து ரூ.61.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலங்கள் நெருங்கி வரும் வேளையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்ந்து வருவது பொதுமக்களையும், தங்கம் வாங்குவோரையும் கவலையடையச் செய்துள்ளது.