பல்வேறு காரணங்களால் உலக அளவில் உள்ள முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து வெளியேறி தங்கத்தின் மீது தங்களின் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதன் காரணமாக சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4ஆயிரத்து 775க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து, ஒரு சவரன் ரூ.160 உயர்ந்து ரூ.38ஆயிரத்து 200ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.67க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.67 ஆயிரமாக விற்பனையாகி வருகிறது.