தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏறுமுகமாகவே உள்ளது. அதன்படி இன்றும் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.38 ஆயிரத்து 136ஆக விற்பனையாகிறது. அதையொட்டி, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.32 கிராம் அதிகரித்து ரூ.4 ஆயிரத்து 767க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேசமயம், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.20 காசுகள் அதிகரித்து ரூ.61.20 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.61.200க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து, தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலையால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.