சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் தங்கத்தின் விலை சவரன் ரூ.39 ஆயிரத்துக்கு மேல் விற்பனையான நிலையில், வியாழக்கிழமையான இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து ரூ.38,704-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.11 குறைந்து, ரூ.4,838-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வாரத்தின் தொடக்கம் முதலே தங்கம் விலை குறைந்து வந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், வெள்ளி கிராமுக்கு 90 பைசா குறைந்து, ரூ.62.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ 62,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.