சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமையான இன்று (ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி) சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.38,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையொட்டி, ஒரு கிராம் தங்கம் விலை ரூ.15 குறைந்து ரூ.4800-க்கு விற்பனையாகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 பைசா குறைந்து ரூ.60.80ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.400 குறைந்து ரூ.60,700ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.